உஷ்ணம் சீராக இருக்க ‘பொன்னாங்கண்ணி’ சிகிச்சை!
நம் உடலில் உஷ்ணம் மட்டுப்பட்டு சீராக இருப்பதற்கு, பொன்னாங்கண்ணிக் கீரை மூலம் வீட்டு வைத்தியம் மேற்கொள்ளலாம்.
தேவையானவை :
பொன்னாங்கண்ணிக் கீரையின் சாறு : 100 மில்லி
நல்லெண்ணெய் : 100 மில்லி
பசும்பால் : 100 மில்லி
வெட்டிவேர், சடாமஞ்சி, வெள்ளை மிளகு - 15 கிராம்
செய்முறை:
ஒரு பாத்திரத்தில் பொன்னாங்கண்ணிக் கீரை சாற்றினையும், நல்லெண்ணெயையும் கலக்க வேண்டும். அதில், பசும்பாலை இட வேண்டும். இந்தக் கலவையுடன், நாட்டு மருந்துக் கடையிலிருந்து வாங்கிய வெட்டிவேர், சடாமஞ்சி மற்றும் வெள்ளை மிளகு ஆகியவற்றைச் சேர்த்து அரைத்த தூளைச் சேர்க்க வேண்டும்.
இதை, அடுப்பில் சூடேற்ற வேண்டும். குழம்பு சுடேறி கொதித்து நீர் சடசடப்பு அடங்கி, அது சுண்டும் வரை வைத்திருக்க வேண்டும். பின்னர் சூடு ஆறிய பிறகு, இந்தத் தைலத்தை பத்திரமாக புட்டிக்குள் மூடி வைத்துக்கொள்ள வேண்டும்.
இந்தத் தைலத்தை வாரம் இருமுறை தலையில் தேய்த்து, குளித்து வந்ந்தால் உடல் சூடு மட்டுப்பட்டு சீராக இருக்கும்.
0 Comments:
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home